அதிகம் பெண்ணாகரம்.. குறைவு வில்லிவாக்கம்..: ராஜேஷ் லக்கானி

Must read

a
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை ஏழு மணிக்கு துவங்கி மாலை ஆறுமணிக்கு நிறைவடைந்தது.
இதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, “இன்று காலை நேரத்தில் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தார்கள்.  சில மாவட்டங்களில் மழை பெய்தததால் வாக்காளர்களின் வருகை சற்று குறைந்தது.
கடந்த ஐந்து மணி வரையில் 69.18 சதவிகித வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. நிறைவு நேரமான ஆறு மணிவரை எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவு ஆனது என்பதை இரவுதான் சொல்ல முடியும்.
தமிழகத்திலேயே அதிகமாக பெண்ணாகரத்தில் 85 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது. குறைவாக வில்லிவாக்கத்தில் 51 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது.
சில சிறு அசம்பாவதிகங்களைத்தவிர அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்து முடிந்தது” என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

More articles

Latest article