பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் –   சிறந்த நடிகர். அதோடு, காவிரி பிரச்சினையா, விவசாயிகள் போராட்டமா.. உடனே அது குறித்து நியாயமான கருத்தை வெளிப்படுத்துவார்.

“இத்தனை நல்ல மனிதரின் இன்னொரு முகம், வேறு மாதிரியாக இருக்கிறது” என்று வருத்தப்படுகிறார்கள் திரையுலகினர்.

“ஆரம்பகாலத்தில் பிரகாஷ்ராஜ் மிகவும் சிரமப்பட்ட காலத்தில் மிகவும் உதவியாக இருந்தவர்கள் நடிகை டிஸ்கோ சாந்தியும் அவர் தங்கையான (நடிகை) லலிதகுமாரியும்தான். ஒரு கட்டத்தில் லலிதகுமாரியை  திருமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். பிறகு பிரபல நடிகர் ஆனார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பெயரும் புகழும் பணமும் கிடைத்தபிறகு லலிதகுமாரியை  விவாகரத்து செய்தார். இந்த நடிகை ஒருவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இதுவரை அவரது சொந்த விவகாரம்தான்.

ஆனால், தான் பெற்ற குழந்தைகளின்  அடிப்படை செலவுக்குக்கூட பணம் தர மறுத்தார். இதனால் லலிதகுமாரி, இரு பெண் குழந்தைகளுடன் தவித்துப்போய் நின்றார். தன் அவல நிலையை, பிரகாஷ்ராஜின் பாராமுகத்தை பத்திரிகைகளில் வேதனையுடன் வெளிப்படுத்தினார். பிறகு நீதிமன்றத்தை நாடினார். அதன் பிறகுதான் தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு ஓரளவு பணம் அளிக்க சம்மதித்தார் பிரகாஷ்ராஜ்.

பிரகாஷ்ராஜின் இந்த நடவடிக்கை அவர் மீதான மரியாதையை குலைத்தது.

அடுத்த சர்ச்சை.. விளம்பரத்தின் மூலம் வந்தது. “திருமண வயதில் உள்ள பெண்களினால் பெற்றோருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது” என்று அந்த விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் டயலாக் பேச… இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என பொது நல வழக்கு தொடரப்பட்டது.  பிறகு அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டது.

அடுத்து..

பிரபல எடிட்டர்,  கிஷோர் இளம் வயதில் அகால மரணமடைந்த போது திரையுலகமே வேதனை அடைந்தது.

பிரகாஷ்ராஜ் தயாரித்த படத்தில் கிஷோர் பணிபுரிந்ததற்கு உரிய ஊதியம் அளிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.

இப்போது அடுத்த சர்ச்சை..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது அல்லவா..

இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார் விஷால். அப்போது துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் உட்பட விஷால் அணியினர் அங்கு இருந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் பேட்டியைத் துவங்கவில்லை. இந்த நிலையில் விஷாலிடம் தாங்களாக கேள்வி கேட் ஆரம்பித்தனர் சில செய்தியாளர்கள். விஷாலும் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஏனே பிரகாஷ்ராஜ் டென்ஷன் ஆகிவிட்டார். பதில் செல்ல முயன்ற விஷாலை தடுத்த அவர், செய்தியாளர்களிடம் மிரட்டல் தொணியில், “நாங்க பயமுறுத்தும் அணி” என்றார் சத்தமாக.

இதைத் தட்டி கேட்க  செய்தியாளர் ஒருவரிடம், “இப்ப என்ன பண்ணணும்.. சொல்லுங்க.. இப்ப என்ன பண்ணணும்..” என்று  தொடர்ந்து மிரட்டலான குரலில் கேட்டுக்கொண்டே இருந்தார்.

பிரகாஷ்ராஜ் நடவடிக்கை, சினிமா செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோ கீழே: நன்றி: பாலிமர் டிவி