தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
நீர் நிலைகள் நிரம்பியதால் தாமிரபரணி முதல் காவிரி, தென் பெண்ணை வரை உள்ள அனைத்து ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது.
குறிப்பாக வறண்ட மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏரி குளங்கள் நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகமாயி திருமணி கிராமத்தில் உள்ள ஏரி ஓட்டை விழுந்து பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இது சீர் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏரி நிரம்பியதை அடுத்து அக்கிராம மக்கள் ஏரியில் வழிபாடு நடத்தினர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரி நிரம்பி கோடி போனதை அடுத்து இந்த ஆண்டு விவசாயம் செழிக்க வேண்டி இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் பூஜை செய்தனர்.