விளாத்திக்குளம்:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர் பட்டியலை திமுக, அதிமுக அறிவித்து உள்ளது.

அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், விளாத்திக்குளம் தொகுதிக்கு கடம்பூர் ராஜுவின் ஆதரவாளரான  முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இது அந்த தொகுதி அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

அந்த தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, மார்க்கண்டேயன், மக்களிடையே எளிமையாக பழகும் தன்மை கொண்டவர். அதனால் அவருக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், சின்னப்பனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து,  அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி  மார்கண்டேயன், அ.தி.மு.கவில் இப்போது தலைமை சரியில்லை. தலைமை சரியில்லாத கட்சியில்  செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து என்ன பயன். அதனால், எனக்கு கொடுக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் ஈபிஎஸ்-ஐ நம்பினேன்.. ஆனால், ஓபிஎஸ் அவரது  தம்பிக்கும் மகனுக்கும் பதவி பெற்றுத் தருவதிலேயேதான் குறியாக இருக்கிறார் என்று ழகூறியவர்,  அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தேர்தல் வியூகம் தெரியாது. இங்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கூட பிரச்னை இல்லை. ஆனால், வழிநடத்தும் பொறுப்பில் உள்ள கடம்பூர் ராஜு  வழி நடத்த தகுதி அற்றவர் என்று கடுமையாக சாடி உள்ளர்.

மார்க்கண்டேயன் வைத்துள்ள பேனர்

இதன் காரணமாக தனது பலத்தை காட்டும் வகையில் விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத் தேர்தலில், அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக  மார்க்கண்டேயன் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.