சென்னை:

மிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்  குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், தேர்தல் முறைகேடுகளை தடுக்க இரு தொகுதிகளுக்கும் பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி சாஹு  காணொலி காட்சி மூலம் ஆலோசனை  நடத்தினார். அப்போது, வாக்குச்சாவடிகளை தயார் செய்வது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பூத்சிலிப் தயாரிக்கும் பணிகள் தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது.