சென்னை:

நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் புகழேந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தார். அவருடன்  முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் வந்திருந்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும்,  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருடன்  திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.