சென்னை:

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி – முத்தமிழ்ச்செல்வன்

நாங்குனேரி தொகுதி – வே.நாராயணன் 

தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குனேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து நேர்காணலும் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர்.

விழுப்புரம் கானை ஒன்றிய அதிமுக செயலாளர் முத்தமிழ்ச் செல்வன் விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளராக அறிவிப்பு

நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி வேட்பாளர்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேலு, காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர், வக்கீல் தம்பித்துரை ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் அணி செயலாளருமான மனோஜ் பாண்டியன் விருப்ப மனுதாக்கல் செய்து உள்ளார். இது போல் அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், நடிகர் ஜஸ்டினின் மகளுமான பபிதா நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.