சென்னை:

டிகர் விஜயின் ‘பிகில்’ பட விழா  ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜயின்  பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விழா நடைபெற்ற தனியார் கல்லூரியான சென்னை சாய்ராம் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், ஏற்கனவே  ரஜினியின் “பேட்ட” ஆடியோ விழா இதே கல்லூரியில், இதே அரங்கத்தில்தான் நடந்தது. அப்போது எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதோ, அதே வகையில்தான் பிகில் பட விழாவுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக பதில் தெரிவித்து உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய்  பேசிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேனர் பிரச்சனை தொடங்கி பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விளக்கினார். அரசுக்கு எதிராக நிறைய கருத்துக்களை அவர் கூறினார்.  சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன், என்று கூறினார்.

இந்த நிலையில் தமிழக அரசு சாய்ராம் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த கல்லூரியில்எற்கனவே  பல சினிமா பட விழாக்கள் நடந்து உள்ளது. அதுபோல ரஜினியின் பேட்ட படத்தின் விழாவும் இங்கு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சாய்ராம் கல்லூரி நிர்வாகம்,  ரஜினியின் “பேட்ட” ஆடியோ விழா இதே கல்லூரியில், இதே அரங்கத்தில்தான் நடந்தது. அப்போது எந்த அடிப்படை யில் அனுமதித்தனரோ அதே அடிப்படைதானே இப்போதும் பிகில் பட விழாவுக்கு அனுமதி  வழங்கப்பட்டதாக தெரிவித்து உள்ளது.

சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி  மீது ஏற்கனவே மாணவர் சேர்க்கை முறைகேடு புகார் உள்ளது  விருப்பமில்லாத  மாணவரிடம் விவரங்களைப் பெற்று கட்டாயப்படுத்தி தங்களது கல்லூரியில் சேர்த்ததாகபரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.