விழுப்புரம்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 56 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்  திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்பட   பல்வேறு சிறிய  கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேர் என மொத்தம் 56  போட்டியிடுகின்றனர். அங்கு  மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது.

ஏற்கனவே வேட்புமனுதாக்கல்கடந்த  ஜூன் 14ஆம் தேதி தொடங்கி   21ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று  செய்யப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ந்தேதி  நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதியன்று  நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.