விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  அன்னியூர் சிவா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை  10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் நாளை (ஜூன் 14ந்தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலையொட்டி, திமுக சார்பில்   விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா வேட்பாளராக  அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், விசிக எம்.பி. ரவிக்குமார் உள்பட பலர்  இட்ம்பெற்றிருந்தனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில்   ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  ஜூலை 13ஆம் தேதியன்று  நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.   இதையடுத்து,  அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,   கடந்த  ஜூன் 14ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அங்கு திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு இதுவரை 7 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.