சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நடப்பாண்டு முதல்முறையாக நிரம்பி உள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க 72 அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது  வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும்.  இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் தென்சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு நிலவிய  கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.  இருந்தாலும் அவ்வப்போது பெய் கோடை மழை  காரணமாக,  வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, விவசாயத்துக்காக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேலும் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், ஏரி முழு கொள்ளவை எட்டியது. அதாவது  வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்படி, ஏரியில் 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். தற்போத நீர்மட்டம்  1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

இதையடுத்து இன்று காலை வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.   கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.