பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக  அங்கு தரை  இறங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை  சுமார் 30 முதல் 40 செ.மீ தூரத்துக்கு இஸ்ரோ  மாற்றி  சாதனை படைத்து உள்ளது. விக்ரம் லேண்டர் தாவி குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சந்திரயான் லேண்டர் விக்ரம்  நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டார். அந்த பகுதியில் நிலை கொண்டிருந்த லேண்டர், அங்கிருந்து சற்று  மேல் எழுப்பி தாவி குவித்து, அருகே உள்ள இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது.   விக்ரம் லேண்டர் தாவி குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் ஜுலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து விண்ணுக்கு சென்ற சந்திரயான்3 திட்டமிட்ட வகையில் நிலவை சுற்றி வந்தது.  அதைத்தொடர்ந்து,  2023, ஆகஸ்ட் 23 இந்திய நேரப்படி சரியாக மாலை 6:04 மணிக்கு விக்ரம் லேண்டர் கலனை நிலவில்  இஸ்ரோ தரை இறக்கியது. இதன் காரணமாக தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா.

இதையடுத்து, நிலவின் தென் துருவத்தை  விக்ரம் லேண்டர்  ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  அதனுள் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவரும் கடந்த 14 நாட்களாக பல்வேறு ஆய்வுகளை செய்து, முக்கிய தகவல்களை வழங்கிய நிலையில், தற்போது அதை உறக்க நிலையில், விஞ்ஞானிகள் வைத்துள்ளனர். இந்த நிலையில், லேண்டர் விக்ரம் சிவசக்தி பகுதியில் நிலை கொண்டிருந்த இடத்திலிருந்து மேல் எழுப்பி இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள இஸ்ரோ,  விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கங்களை மீறியது. இது வெற்றிகரமாக ஒரு ஹாப் பரிசோதனைக்கு உட்பட்டது. கட்டளையின் பேரில், அது இயந்திரங்களைச் சுடச்செய்தது, எதிர்பார்த்தபடி தன்னை சுமார் 40 செமீ உயர்த்தி, 30 – 40 செமீ தொலைவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

முக்கியத்துவம்?: இந்த ‘கிக்-ஸ்டார்ட்’ எதிர்கால மாதிரி திரும்பவும் மனித பணிகளையும் உற்சாகப்படுத்துகிறது!

அனைத்து அமைப்புகளும் ஆரோக்கியயமாக  செயல்படுகின்றன மற்றும்  வரிசைப்படுத்தப்பட்ட ராம்ப், ChaSTE மற்றும் ILSA ஆகியவை மீண்டும் மடித்து சோதனைக்குப் பிறகு வெற்றிகரமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டன.  லேண்டரை சிறிது தூரம் நகர்த்தும் போது அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டன. நிலவின் தென் பகுதியிலுள்ள லேண்டரின் அனைத்து கருவிகளும் சரியாக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.