விக்ரம் பிரபுவின் ’முடி சூடா மன்னன்’ தலைப்பு மாற்றம்

Must read

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை இயக்கினார். தற்போது விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவான படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘முடி சூடா மன்னன்’ என தலைப்பு வைத்திருந்தனர்.
தற்போது இப்படத்திற்கு ‘சத்ரியன்’ என பெயர் மாற்றியுள்ளனர். ‘விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் சத்ரியன். தற்போது இதே தலைப்பை விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்திற்கு வைத்துள்ளனர்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, கெவின் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

More articles

Latest article