தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹான், பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் அவர் ஆதித்யா கரிகாலனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் பாடகி சுசீலாவை சமீபத்தித்தில் சந்தித்திருக்கிறார் விக்ரம். சுசீலாவின் தீவிர ரசிகரான விக்ரம், அவரை நேரில் சந்திக்க ஆசைப்பட்டதாகவும், இதையடுத்து இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், 10 நிமிடம் என்று திட்டமிடப்பட்ட அந்த சந்திப்பு 2 மணி நேரம் தொடர்ந்ததாகவும், பாடகி சுசீலாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.