லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய்.


இந்நிலையில் தளபதியின் பழைய ஒர்க்அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்க்கையில் கில்லி பட சமயத்தில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது.