நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

சஞ்சய் இயக்கி நடித்திருந்த ஒரு குறும்படம் சென்ற வருடம் வெளியாகி அதிக அளவில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்குகிறார் என தகவல் பரவி வருகிறது.

உப்பேனா என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி தான் வாங்கியுள்ளார். அந்த படத்தில் தான் ஹீரோவாக விஜய்யின் மகனை அறிமுகம் செய்கிறார் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது.

இந்த படத்தினை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது

[youtube-feed feed=1]