நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இந்த மாதம் 13 ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ரிலீசுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்திருக்கிறது.

 

இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் குவைத் நாட்டில் இந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது.

ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த குரூப் மற்றும் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர். ஆகிய திரைப்படங்களுக்கு குவைத் அரசு தடை விதித்திருந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கும் தடை விதித்திருக்கிறது.