ஜெ. மருத்துவமனை வீடியோ பதிவை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

Must read


 
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கதக்கது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருக்கும் வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்.
ஜெயலலிதா இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை கூறிய நிலையில், மாறாக அவர் மரணம் அடைந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் திடீர் மரணம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

More articles

Latest article