சென்னை :

மிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது, தமிழ்த்தாயை அவமதித்ததாகும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

நேற்று நடைபெற்ற சமஸ்கிருத நூல் வெளியிட்டு விழாவில் கவர்னர் பன்வாரிலால், பாஜக எச்.ராஜா போன்றோருடன் கலந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியால், நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்தே இருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவரது செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

தமிழ்தாய் வாழ்த்தி பாடும்போது, எழுந்து நிற்காமல் தமிழ்த்தாயை விஜயேந்திரர் அவமதித்து விட்டார் என்றார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்வதாக கூறியுள்ள சங்கர மடம், தேசிய கீதம் இசைக்கும் போது ஏன் தியானம் செய்யவில்லை எனவும்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக  ஆளுநர் பங்கேற்ற கூட்டத்தில் இவ்வாறு நடந்து இருப்பது வருந்தத்தக்கது என்றும் விஜயேந்திரர் தவறை மறைக்க தியானம் செய்து கொண்டு இருந்ததாக சமாதானம் சொல்கிறார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பேருந்து கட்டம் உயர்த்தி உள்ளதன் காரணமாக,  அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க  சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.