சேலம்: 16 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாநகர காவல்துறைக்கு பெண் போலீஸ் கமிஷனராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடோ சென்னை தலைமை இட ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சேலம் மாநகர காவல்துறை தொடங்கப்பட்டபோது, சேலல் மாநகர முதல் கமிஷனரான ஜெகநாதன் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து, இதுவரை ஆண்களே கமிஷனராக நியமிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த 2006ம் ஆண்ட சேலம் மாவட்ட முதல் பெண் கமிஷனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார். அவருக்கு பின், 13 ஆண்கள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சேலம் மாநகர போலீசில், 2-ம் முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஆவடி போக்குவரத்து, தலைமை இட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.