சென்னை:

சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மவுனமாக கையை அசைத்தபடியும், அவ்வப்போது கும்பிட்டபடியும்  அவரது பிரசாரம் அமைந்திருந்தது.

அவரது கர்ஜனையை கேட்கலாம் என எதிர்பார்த்திருந்த தேமுதிகவினருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அன்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆழகாபுரம் ஆர் மோகன்ராஜ் , மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  சாம்பால் அவர்களுக்கும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனன் ஆகியோருக்கு  வாக்குகளை சேகரிக்க வேன்மூலம் சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

நேற்றிரவு விஜயகாந்த் பேசும் ஒரு வீடியோவை தேமுதிக தலைமை வெளியிட்டிருந்தது. அதில், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அவர் வாக்கு சேகரித்திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விஜயகாந்தை தேமுதிக தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த  நிலையில் அவர்  எந்த இடத்திலும் பேசாமல் பிரச்சாரம் செய்ததால் தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இன்றைய பிரசாரத்தை முதலில் மத்திய சென்னை தொகுதிக்குள் விஜயகாந்த் வேன் நுழைய ஆரம்பித்ததுமே, தொண்டர்கள் சத்தமாக முழக்கமிட்டனர். குறிப்பாக வில்லி வாக்கத்தை அடைந்தவுடன் விஜயகாந்த் கூலிங் கிளாஸ் கழட்டிவிட்டார். பிரச்சார வேனில் பாமக வேட்பாளர் சாம் பால் ஏறி நின்றுகொண்டார். அவரது ஒரு கையில் தேமுதிக முரசு சின்னம் இருந்தது. மற்றொரு கையில் தங்களது கட்சி சின்னமான மாம்பழத்தை வைத்து கொண்டார்.

வேனுக்குள் விஜயகாந்த் இரு பக்கமும் கையை வேகமாக ஆட்டி, ஆசைக்க, மேலே பாமக வேட்பாளர் சாம்பால் அனைவருக்கும் சின்னங்களை காட்டியபடியே வந்தார். விஜயகாந்த் ஏதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஆனால் வெறுமனே கையை அசைத்து சென்றது தேமுதிகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.