ராமேஸ்வரம்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப தகுதியானவர் விஜய காந்த் ஒருவரே என அவரது மனைவியும், தேமுதிக பொருளாளரமான பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழகத்தல் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது குடும்பத்துடன் நேற்று ராமேஸ்வரம் சென்றார். அங்கு சில பூஜைகள் செய்த நிலையில், ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தமிழகத்தில், கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இருந்தபோதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தற்போது, அவர்கள் இல்லாமல் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றி டத்தை விஜயகாந்தால் மட்டுமே நிரப்ப முடியும். 2021 சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிடுவதையே தொண்டர்கள் விரும்புவதாகவும் பிரேமலதா தெரிவித்தார்.
மேலும், அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது என்பதை ஒப்புக்கொண்டவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாட்டில் சில நிறைகளும், சி குறைகளும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.