விஜயகாந்த் ஃபேமிலி செல்ஃபி

Must read

v
 
சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியதும் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.  அதனை விஜயகாந்தின் மகன்  சண்முகபாண்டியன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் குடும்பத்துக்கு வாக்கு உள்ளது. அங்கு இன்று காலை விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகப் பாண்டியன் என அனைவரும் சென்று வாக்களித்தார்கள்.
வாக்களித்த பிரபலங்கள் பலர், தங்களது கை விரலில் மை இடப்பட்டுள்ளதை ஊடகங்களுக்கு காட்டியபடி, போஸ் கொடுத்தார்கள். . ஆனால், தான் வாக்களித்ததும் அவ்வாறு செய்ய விஜயகாந்த் மறுத்தார்.  பேட்டியும் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
இதனால் விஜயகாந்த் கோபத்தில் இருப்பதாகவும், சோகத்தில் இருப்பதாகவும் பல்வேறு யூகங்கள்  எழுந்தன.
இந்த நிலையில், வாக்களித்த பின் வீட்டிற்கு சென்ற விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செல்பி எடுத்துள்ளார். இதில் விஜயகாந்த் சிரித்தபடி மகிழ்ச்சியாக காட்சி அளிக்கிறார் விஜயகாந்த்.
 
 
 

More articles

1 COMMENT

Latest article