விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. வாழ்த்து..

Must read

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் என  பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு கட்சிக் கொடி மற்றும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக,  தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ள நிலையில், இன்று அவரது வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

2006 ம் ஆண்டு முதல் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ விஜயகாந்த் கொண்டாடி வரும் சூழலில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும் தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறும்  வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் 69 வது பிறந்தநாளை யொட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெள்யிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

More articles

Latest article