காய்கறிகளை ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.

விலைவாசி உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்வது போன்று, அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.