முதல்வர் வேட்பாளர்கள் விஜயகந்த், சீமான் தோல்வி: ஜூ.வி. கருத்துக்கணிப்பு

Must read

a

ஜெ., கருணா, விஜயகாந்த், அன்புமணி, சீமான்.. முதல்வர் வேட்பாளர்கள் ரிசல்ட் என்ன: ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் பதினாறாம் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி பல்வேறு ஊடகங்கள், நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக 77 இடங்களையும் அதிமுக 73 இடங்களையும் பாமக ஒரு இடத்தையும் பெறும் என்றும், மீதமுள்ள தொகுதிகளில இழுபறி நிலை நிலவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல முதல்வர் வேட்பாளர்கள் வெற்றி தோல்வி குறித்தும் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. முதல்வர் வேட்பாளர் கருணாநிதி, அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா, பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆகியோர வெற்றி பெறுவார்கள் எனறு கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் ம.ந.கூட்டணி தேமுதிக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோல்வி அடைவார் என்றும், அதே  போல நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமான் கடலூர் தொகுதியல் தோல்வி அடைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

More articles

1 COMMENT

Latest article