சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றி வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலம் ஒரங்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும், கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை, செய்தியாளர்கள் முன்னிலையில் தோன்றி  தெரிவித்தார்.

அதன்படி, இன்று புதியதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1242 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 118 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இது 9.5 சதவிகிதம் என்றும் தெரிவித்தார்.

இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 21,994 பேர்.

கொரோனா பரிசோதிக்கப்பட்ட நபர்கள் 17, 835 

இன்று பரிசோதனை செய்யப்பட்டது  2,739 பேர்

கொரோனா சோதனைக்கான  ஆய்வுகங்கள் 26

ஒன்றரை லட்சம் நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய அளவுக்கு மருந்துகள் தமிழக அரசின் கைவசம் உள்ளன. நாட்டிலேயே அதிக ஆய்வகங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது எனவும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என கூறிய  அமைச்சர், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இன்று பாதிக்கப்பட்ட 38 பேரில் 34 பேர் டெல்லி தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மீண்டும் செய்தியாளர்களை சந்திப்பாரா…  அல்லது,  மீண்டும் சுகாதாரத்துறைச் செயலாளர் சந்திப்பாரா  அல்லது தலைமைச் செயலாளர் சந்திப்பாரா  என்பது நாளைக்குத்தான் தெரியும்…