கண்ணன் ரவி தயாரிக்கும் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் ’இராவணகோட்டம்’ படத்துக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
சாந்தனுவின் பட அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது புதிய படத்துக்கு வாழ்த்து கூறியிருப்பதாக சாந்தனு தனது மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார். ’வாழ்த்துக்கள் நண்பா.. தலைப்பு செம்ம’.. காலையில் முதல் வேலையாக இந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுகின்றன. மெர்சல் ஆயிட்டேன். உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி விஜய் அண்ணா.” என்று சாந்தனு பதிவிட்டுள்ளார்.