
விஜய் சேதுபதி நடிக்கும் ‘கடைசி விவசாயி’படத்தின் ஸ்டில் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில், விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் வட்டாரத்தில் விசாரித்தபோது ‘கடைசி விவசாயி’படம் 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாகவும், படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவில்லை. 85 வயதான உண்மையான விவசாயி ஒருவரே படத்தின் கதாநாயகன் என்றும் கூறுகின்றனர்.
Patrikai.com official YouTube Channel