தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.

அதன் பிறகு, சில ஆண்டுகள் கழித்து விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ‘தர்மதுரை’ என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கினார்.

அதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. ஆனால், இரண்டு படங்களின் வெளியீடு குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.