தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கில் எல்லோரையும் போலவே சினிமா பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சுமார் 190 பத்திரிகையாளர்களுக்கு தலா 1000 ரூபாய் அளித்துள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மலையாளத்தில் நடித்திருக்கும் 19(1)(a) ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. லாபம், மாமனிதன் படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இது தவிர மாநகரத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் படத்திலும், காந்தி டாக்கீஸ் என்ற மற்றுமொரு இந்திப் படத்திலும் நடிக்கிறார். தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர், முகிழ், காத்துவாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறனின் விடுதலை உள்பட பல படங்கள் தயாரிப்பில் உள்ளன.