காந்திநகர்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி இன்று திடீரென விலகியுள்ளதை அடுத்து, அம்மாநில முதல்வர் பதவி யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. 5 பேர் முதல்வர் பதவியை பிடிக்க போட்டியில் இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபடுவதாகவும், தற்போதைய துணை முதல்வர் நிதின் படேலும் களத்தில் இருப்பதாகவும், , லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேல், மாநில கேபினட் அமைச்சர் ஆர்.சி.பால்டு மற்றும் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல். இவர்களில் ஒருவரே முதல்வர் பதவியை பெறும் வாய்ப்பு இருப்பக பாஜக தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, தேசிய அரசியலுக்கு வந்து, பிரதராக பதவி ஏற்றதும், மாநில முதல்வராக ஆனந்தி பென் பட்டேல் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் ரூபானி. 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்தார்.
அடுத்த ஆண்டு (2022ம் ஆண்டு) குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விஜய் ரூபானி, “முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தற்போது குஜராத்தில் முகாமிட்டிருப்பதால் விரைவில் புதிய முதல்வர் குறித்தான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. களத்தில் மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்ட்வியா முதல்வருக்கான போட்டியில் இருந்தாலும், அவர் சமீபத்தில்தான் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால், அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும், மற்ற 4 பேரில் ஒருவர் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.