விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்து ஏலம்!

Must read

 
மும்பை:
ந்திய தொழிலதிபரான விஜய்மல்லையாவின் சொத்துக்கள் ஏலம் விட 17 வங்கிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா, தொழில் வளர்ச்சிக்காக வங்கிகளிடம் 900 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால்,  கடனை அடைக்காமல் வெளிநாடு தப்பிவிட்டார். தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

கிங்பிஷர் தலைமையகம், வங்கி அறிவிப்பு
விஜய்மல்லையாவின் சொகுசு விமானம்

விஜய் மல்லையா வாங்கிய  கடனை வசூலிக்க  அவரது  7000 கோடி அளவிலான சொத்துக்களை இரண்டாவது முறையாக ஏலம் விட வங்கிகள்  கூட்டமைப்பு முடிவு  செய்துள்ளது.  அதன்படி இந்தமாதம் ஏலம் நடைபெறும் என வங்கிகள் அறிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்கிகள் ஏலம் விட்டபோது, யாரும் அவரது  சொத்துக்களை வாங்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக தற்போது மீண்டும் ஏலம் விட முடிவு செய்துள்ளது.
இந்த ஏலத்தில் விஜய் மல்லையா , தனது  சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்த சொகுசு விமானமும் உள்ளது.  இதன்  ஆரம்ப விலை முதலில் நடைபெற்ற ஏலத்தின்போது  ரூ.152 கோடி என நிர்மாணிக்கப்பட்டது.  தற்போது,  ஆரம்பவிலை  குறைவாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான  ஏலம் வரும் 18ந்தேதி  நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிங்பிஷர் தலைமையகம், வங்கி ஜப்தி அறிவிப்பு
கிங்பிஷர் தலைமையகம் – வங்கி ஜப்தி அறிவிப்பு

மேலும்,மும்பையில் அமைந்துள்ள   17 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள   கிங்பிஷர் ஏர்லைன்சின் தலைமையகமும் ஏலம் விடப்படுகிறது. இதன் விலை ரூ.135 கோடி ஆகும். இதற்கான ஏலம் வரும் 4ந்தேதி நடக்கிறது.
இதுதவிர, கிங்பிஷர் ஏர்லைன்சின் வர்த்தக குறியீடு , பிராண்ட்,  ‘லோகோ’, ‘பிளை தி குட் டைம்ஸ்’ என்ற புகழ்பெற்ற வாசகம் ஆகியவற்றையும் வங்கிகள் கூட்டமைப்பி சார்பாக  வருகிற 25–ந் தேதி ஏலம் விடுகின்றன.
மேலும் கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லா, இன்னோவா கார் உள்ளிட்ட 8 கார்கள், அலுவலக மரச்சாமான்கள் ஆகியவையும் ஏலம் விடப்படுகின்றன.
 

More articles

Latest article