லண்டன்:

ந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம்  ஏற்கனவே உத்தரவிட்டது.

இதை எதிர்த்து  விஜய்மல்லை மேல்முறையீடு செய்த மனுவை லண்டன் நீதி மன்றம்  ஏற்கனவே நிராகரித்த நிலையில், நாடு கடத்துவதை எதிர்த்து மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இந்தக் கடன்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.  இந்த நிலையில், அவர் திடீரென குடும்பத்துடன் தலைமறைவானார்.

இது குறித்து வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதைத்தொடர்ந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்த விஜய்  மல்லையாவை இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று லண்டன் போலீசார் கைது செய்திருந்தனர்.  தற்போது அவர் ஜாமினில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதி மன்றம் உத்தர விட்டிருந்தது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து உயர்நீதிமன்றத் தில் விஜய் மல்லையா தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் மல்லையா புதுப்பித்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று லண்டன் உயர்நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறினார்.