தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் #தளபதி68 குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளார்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் 25 வது படம் என்பதால் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் சர்வதேச தரத்துக்கு மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் இரண்டாவது முறையாக நடிகர் விஜய்-யுடன் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.