நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் 22-ம் தேதி வர உள்ள நிலையில் பர்த்டே காமன் டிபியை பிரபலங்கள் பலர் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.

விஜய் தனது தனது 46-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையின் 20 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.

#THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹாஸ் டேக்குகள் தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை இரண்டிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.