விஜய் ஆண்டனி நடித்து கடந்த மாதம் வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் காக்கி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதனை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது.

இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதி மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.