சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச அத்ரெயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் மனோஜ் பீதா இப்படத்தை இயக்குகிறார். Labrynth பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.