சென்னை:  சைதாப்பேட்டையில் உள்ள சுற்றுச் சூழல்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிசெய்து வரும்,  பாண்டியன் என்பவரது வீட்டில்  நடத்தப்பட்ட ரெய்டில், 1 கிலோ தங்கம், வைரம்,1 கோடி ரொக்கம், சொத்து பத்திரங்கள் உள்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று  அவர் பணியாற்றி வரும, சைதாப்பேட்டை பனகல் கட்டிடத்தில் உள்ள  அலுவலகத்தில் நடந்த ரெய்டில் ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது,  அவரது  இல்லத்தில் இருந்து ரூ.1.37 கோடி ரொக்கம்  பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  3.08 கிலோ தங்க நகை, 10.5 காரட் வைர நகைகள், 3.3 கிலோகிராம் வெள்ளி பொருட்கள்,  ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களை, ரூ.37 லட்சம் பிக்சட் டெபாசிட் ஆவணங்கள், ஒரு கார், 3 இருசக்கர வாகனங்கள் உள்பட ஏராளமானவற்றை  லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

[youtube-feed feed=1]