சென்னை:

சென்னையில் 2 அரசு அலுவலகங்கள் உள்பட, தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று  திடீர் சோதனை நடத்தினர், இதில், கணக்கில் வராத 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் விதிகளை மீறி அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்  சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த  இடைத்தரகர்ககளையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கணக்கில் வராத 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதுபோல, சென்னை புளியந்தோப்பு சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கணக்கில் வராத 3 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

விழுப்பும், கரூர், திண்டுக்கல் என மொத்தம் 5 இடங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.