புதுடெல்லி: இந்தியாவிற்கு நடைமுறைக்கேற்ற மொழிக்கொள்கை தேவை என கூறியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு.

அவர் கூறியதாவது, “அறிவுநுட்பம், சமத்துவம், தேசியப் பண்பாடு மற்றும் தேவைகளை நிறைவுசெய்தல் மற்றும் இந்திய மாணாக்கர்களை உலகளாவிய அளவில் தயார்படுத்துதல் போன்றவைகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, நமது மாணாக்கர்களுக்கு தாய்மொழியுடன் சேர்த்து இதர முக்கிய மொழிகளுக்கும் முக்கியத்துவம்கொடுக்கும் வகையில் மொழிக்கொள்கையை உருவாக்க வேண்டும்” என்றுள்ளார் துணை ஜனாதிபதி.

சமீபத்தில் மும்மொழிக் கொள்கை குறித்தப் பரிந்துரையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழலை அடுத்தே, வெங்கைய்யா நாயுடுவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

பல்வேறான மாநிலங்களில் எழுந்த எதிர்ப்புகளை அடுத்தே, இந்தி மொழியை கட்டாயமாக பள்ளிகளில் கற்பிக்க வேண்டுமென்ற பரிந்துரையை திருத்தியமைத்துள்ளது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.