* உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக அதிகபட்ச ரன்கள் இந்த 352.

* உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில், 1987ம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியாவை இந்தியா வெல்வது இப்போதுதான்.

* இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடத் துவங்கி, செட்டிலாகி, பின்னர் அதிரடியாக ஆடும் நடைமுறையைப் பின்பற்றினர்.

* ஒரு பேட்ஸ்மேன் சதமடிக்க, 2 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்.

* முதலில் சிறப்பாக ஆடி, இறுதிகட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து, ரன் ரேட் குறையும் நிலை ஏற்படவில்லை.

* இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது முக்கியமான அம்சம்.

* பேட்டிங் செய்த 6 இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர்கூட சொதப்பவில்லை.

* 4வது இடத்தில் யாரும் எதிர்பாராத வகையில், ஹர்த்திக் பாண்டியா களம் இறங்கி வெளுத்து வாங்கினார்.

* இந்தியாவின் 6 பேட்ஸ்மென்களில் ரோகித் ஷர்மா தவிர, மற்ற அனைவரும் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை அடித்தனர்.

* இந்தப் போட்டி முழுவதுமே அனைத்து நிலைகளிலும் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஒரு இடத்தில்கூட ஆஸ்திரேலியாவால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை.

* இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் 2 ஆட்டங்களிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பும் நல்லமுறையில் உள்ளது.

* நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா சாய்த்தது. கடைசிப் பந்தில் கடைசி விக்கெட் பிடுங்கப்பட்டதும் ஒரு சுவாரஸ்யமே.

* ஆஸ்திரேலியாவின் இரண்டு வீரர்கள் ரன் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

* மொத்தத்தில், இந்தப் போட்டி இரண்டு வலுவான அணிகளுக்கு இடையிலான சிறப்பான போட்டியாக இருந்ததோடு, இந்த உலகக்கோப்பையின் ஒரு சிறந்த போட்டியாகவும் அமைந்தது.