விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு

Must read

சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது.

மொத்தம் 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டு காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம், செய்யூர், திருப்போரூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில்,விசிக சட்டமன்ற கட்சிக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, விசிக சட்டமன்ற கட்சிக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டமன்ற விசிக:

தலைவர் – ம. சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ.)

துணைத் தலைவர்கள் – முகமது ஷா நவாஸ் (நாகை எம்.எல்.ஏ.), மு. பாபு (செய்யூர் எம்.எல்.ஏ.)

கொறடா – எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர் எம்.எல்.ஏ)

More articles

Latest article