காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூரம் விழா நடந்தது.

ஸ்ரீ காமாட்சி அம்மனின் ஜன்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம் தினம் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் வருடா வருடம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  ஒவ்வொரு வருடமும்  காஞ்சி சங்கர மடத்தில் இருந்து நூற்றுக் கணக்கில் பால்குடங்கள் ஊர்வலம் நடக்கும்.

இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜவீதிகள் வழியாகக் காமாட்சி அம்மன் சன்னிதிக்கு வருவார்கள்.  அதன் பிறகு அம்மானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தனக் காப்பு சாத்தப்படும்.,   அம்மனின் உற்சவ விக்கிரகம் திருவீதி உலா வரும் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐப்பசி மாத பூரம் விழா பக்தர்கள் இன்றி நடந்துள்ளது..  அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்துள்ளது.   மேலும் அம்மன் உற்சவ விக்கிரகம்  கோவில் உள்ளேயே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.