ரவி

 

 

மதுரையில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் சற்று நேரத்தில் துவங்க இருந்த நிலையில் சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்தார்.

உடலெங்கும் தீ எரிய, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார்.

அருகிலிருந்தவர்கள்  உடனடியாக தீயை அணைத்து, அவரை அருகிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தன் கண்முன் தீக்குளித்த தொண்டரை பற்றி பேசி வைகோ மேடையில் கண்ணீர் விட்டு அழுதார்.

பிறகு, மருத்துவமனைக்குச் சென்று ரவியை சந்தித்தார். 90 சதவிகித காயத்துடன் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறார் ரவி.

அவரிடம், “இதுபோல தீக்குளிப்பது சரிதானா.. மனைவி, குழந்தைகள், நான்.. எல்லோரும் இல்லையா.. அதை நினைத்துப் பார்க்கவில்லையா…” என்று அழுதபடியே ரவியிடன் நியாயம் கேட்டார்.

அந்த உருக்கமான வீடியோ..