சென்னை:

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் சிலர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களை தேடி பிடித்து கைது செய்தனர். 4 பெண்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கூட்டம் கூடாமல் தடுக்கும் வகையில் மெரினாவில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவ்வழியாக வாகனங்களில் செல்வோரை தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.