டில்லி,
பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு நேற்று அறிவிக்கப்பட்டார்.
நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்கு பின்னர் பாஜக தலைவர் அமித் ஷா வெங்கய்யா நாயுடு பெயரை அறிவித்தார்.
அதையடுத்து தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இன்று காலை பாரதியஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற வெங்கையா நாயு, நாடாளுமன்ற வளாகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கலின் போது பிரதமர் மோடி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி , அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.