சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைகிறது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படத்தில், விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக, விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டில் நேற்று நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.