தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜின் படம் இது .

இந்நிலையில் தளபதி65 படத்திற்காக தளபதி விஜய் பல இயக்குனர்களிடம் கதை கேட்ட நிலையில் தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் வெற்றிமாறன் இடமும் ஒரு கதை கேட்டுள்ளார் .

முதல் முறையாக வெற்றிமாறன் அந்த படத்தை பற்றி வாய் திறந்துள்ளார். தற்போது தளபதி விஜய்க்கு கதையை ரெடி செய்து கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

அனேகமாக தளபதி66 படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.