பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்

Must read

மும்பை

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் இன்று மரணம் அடைந்துள்ளார்.

பாலிவுட்டுக்கு தற்போது மிகவும் சோதனைக்காலம் எனக் கூறப்படுகிறது   நேற்று பிரபல நடிகர் இர்ஃபான் கான் மரணம் அடைந்துள்ளார்.  இன்று மற்றொரு பிரபல நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்ததாகச் செய்தி வெளியாகி உள்ளது.   சுமார் 67 வயதாகும் ரிஷி கபூர் கடந்த 2018 முதல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்  அதையொட்டி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்ற செப்டம்பர் மாதம் நாடு திரும்பிய அவர் இங்கு வந்த பிறகும் கடந்த பிப்ரவரி மாதம் இரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.  நேற்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்  பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.   மறைந்த ரிஷி கபூரின் மனைவி நீது சிங் முன்னாள் பாலிவுட் கதாநாயகி ஆவார்.  அவர் மகன் ரண்பீர் கபூர் தற்போது பல இந்தப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றுள்ளார்.

More articles

Latest article